July 2, 2021

தமிழீழ வரலாற்றை தமிழர் பக்க நியாயங்களை கூறும் படங்கள் வருவது மிகவும் அரிது. பல தடைகளை தாண்டி நேர்மையாகவும் முன்னுதாரணமாகவும்  மேதகு திரைப்படத்தை வெளியிட்டமைக்கு எமது நன்றிகள். தமிழீழ வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றை உங்கள் கடின உழைப்பினால் வெளிக்கொண்டு வந்ததை வாழ்த்துகிறோம். மிகவும் நேர்த்தியாக தலைவரின் இளமை கால காட்சிகளையும் தமிழர்கள் ஏன் சிறிலங்காவின் தமிழின அழிப்பை தடுக்க ஆயுதம் ஏந்தினர் என்பதையும் ஆரம்பகால காட்சியமைப்பில் அறத்துடன் அணுகியதற்கு எங்கள் பாராட்டுக்கள்.

methagu - Twitter Search

கடந்த வருடம் பொய்யா விளக்கு (The Lamp of Truth) எனும் தமிழின அழிப்பு பற்றிய திரைப்படத்தை தயாரித்து இருந்தோம். ஒரு வரலாறு சார்  திரைப்படத்தை தயாரிப்பதும் அதை விநியோகிப்பதன் கடினத்தையும் நன்கு உணர்ந்துள்ளோம். தமிழீழ வரலாற்றை பல தடைகளை நெருக்கடிகளை கடந்து  தமிழர்கள் தான் சொல்லவேண்டி உள்ளது. தங்களின் திரைப்படம் அதில் ஒரு காத்திரமான முதல் படி. இப்படியான படங்கள் மேலும் தொடர புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு நல்குவர் என எதிர்பார்க்கிறோம். 

மேதகு திரைப்பட இயக்குனர் கிட்டு மற்றும் திரைக்குழுவினர் அனுமதிக்கும் பட்சத்தில் Can $500.00 முற்கட்டணமாக  செலுத்தி Canada Ottawa வில் COVID முடிந்த பின்னர் திரையிட்டு அதில் வரும் நிதியை உங்களிடம் அளிக்க விரும்புகிறோம். எமது நன்றியை இவ்விதம் சொல்வதே பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம்.

நன்றி 

வெண்சங்கு கலைக்கூடம்

Whiteconchstudios.com

Email: admin@whiteconchstudios.com