14 entries.
Получите консультацию юриста бесплатно прямо сейчас для решения ваших юридических вопросов!
Значение юридических консультаций для граждан. Консультации юристов необходимы каждому в наше время.
Неприятности, связанные с правом, возникают из-за запутанности законов. Консультирование с профессионалом поможет разобраться в ситуации.
В каждом правовом вопросе важны знания в узкой области права. Быть уверенным в своих знаниих о праве помогает только опытный юрист.
Выбор квалифицированного юриста – залог успешного разрешения вопросов. Профессионал поможет избежать ошибок и достичь желаемого результата.
Заказать Хавейл - только у нас вы найдете цены ниже рынка. Быстрей всего сделать заказ на haval официальный дилер в москве цены можно только у нас!
купить автомобиль haval
купить машину хавал в москве у официального - http://www.havalmsk1.ru/
Thanks for making this film and letting the world know about the genocide of the Tamil people in Srilanka! These facts are hidden by the Srilankan government and the Tamil politicians are afraid to tell these facts to the world! We hope that Tamil people get justice and the war criminals punished!
Vannakam 🙏 It broke my heart to see the suffering of Dr. Varatharaja & his people treated so badly by the Sri Lankan Army. I am proud of him for his role as a loyal Doctor and his love for his community. I wish him and his family all the success and prosperity for their future. Well Done to the producers and other role players for a wonderful movie and telling the world about this story. Wish you well on your upcoming productions. Take Care and God Bless. Mikka Nanri🙏
It was a great movie. Dr Varathan acting was excellent. The producers had done a marvelous job. Overall movie was great and it touched my heart. Wish you all the best in forth coming production. Thanks.
I enjoyed watching this great movie. Dr Varathan’s acting was excellent, very touched by the movie. Movie directed by the team was great. Good job !. Thanks.
அனைவருக்கும் வணக்கம்
கனடாவின் டொரோண்டோவில் வசித்து வருபவரும், தமிழ் சமூகத்துக்கு பல அறிவார்ந்த நல்ல விடயங்களை செய்து வருபவருமான திருமதி.ராஜி பற்றர்சன் அவர்களின் நேர்காணலில் வைத்திய கலாநிதி.வரதராஜா துரைராஜா அவர்களை பற்றி அறிந்துகொண்டு, அவர் இன்றைய உலக மக்களுக்கும் எதிர்வரும் தலைமுறையினருக்கும் தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிந்துகொள்ளும் முகமாக ,இறுதி யுத்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை, அவரது நேரடி அனுபவத்தை "பொய்யா விளக்கு" என்னும் ஆவண திரைப்படமாக கனடாவில் வசித்து வரும் இயக்குனர் திரு.தனேஸ் கோபால் தயாரித்துள்ளதை அறிந்தேன்.
பெரும்பாலும் திரைப்படம் பார்ப்பதில் பெரிதாக ஆர்வம் கொண்டவளில்லை. ஆனால் இதை பார்த்தே ஆக வேண்டும் என தோன்ற உடனே https://whiteconchstudios.com/ என்ற வலைதளத்தின் மூலம் $14.95 வாங்கினேன். பணம் செலுத்தியதும் மின்னஞ்சலுக்கு திரைப்படத்தின் இணையதள முகவரியையும் கடவுச்சொல்லையும் அனுப்பிவைக்கிறார்கள்.காணும் உரிமை பெற்று படத்தை பார்த்தேன்.
இனப்படுகொலையின் யுத்த முடிவு நாளான மே 18 க்கு முன்பு மே 15 வரை முள்ளிவாய்க்காலில் தன்னுயிரையும் துச்சமாக எண்ணி மனித உயிர்களை காக்கும் மகத்தான மருத்துவ பணியை பல இன்னல்களுக்கிடையே செய்த வைத்திய கலாநிதி.வரதராஜா அவர்களே இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்,...இல்லை வாழ்ந்துள்ளார் என்பது இத்திரைப்படத்தின் வரலாற்று சிறப்பு.
படம் பார்க்க தொடங்கியவுடன் தொடங்கிய எனது கண்ணீரும் திரைப்படம் முடிந்தும் முடிவில்லாமல் நீண்டது. புலம்பெர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் டாக்டர், துப்பாக்கி மற்றும் பீரங்கி சத்தத்துடன் கனவாகிய நினைவுகளுடன் கண்விழிக்கும் காட்சியில் தொடங்குகிறது திரைப்படம். இனப்படுகொலைக்கு ஆளாகி தாய் மண்ணை , உறவுகளை , உடமைகளை துறந்து ஆறா ரணத்தை மட்டும் மனதில் கொண்டு புலம்பெயர்ந்து உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழீழ தமிழ் மக்களின் நிலையை தான் இக்காட்சி முன்வைக்கிறது.நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மானுடம் மீது கருணை கொண்ட கடைசி யுத்த கால காணொளிகளையும் விடயங்களையும் முழுதாக கண்டவர்கள் பெரும்பாலோரார்களின் இன்றைய நிலையையும் இக்காட்சி கண்முன்னே கொண்டுவருகிறது.
இந்த படம் மொன்றியலில் பெரிதாக விளம்பரம் செய்யப்படாமல், பேசப்படாமல் போனது வியப்பாய் தான் உள்ளது.இவ்வளவு தியாக உள்ளமும் அர்ப்பணிப்பும் கொண்டு 70 000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை வாகரை மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து காப்பாற்றி வெளியேற்றி அதன் பின்னர் முள்ளி வாய்க்காலுக்கு தன்னார்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தானாக முன்வந்து மருத்துவ சேவை செய்த ஒரு தமிழரை பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களுக்கு இல்லாமல் போனதை என்னவென்று சொல்வது.
இன்று ஜெனிவா உள்ளிட்ட பல உலக அரங்குகளில் உண்மையை உரக்க சொல்லி தமிழ் இனபடுகொலைக்கு நீதி கேட்டும் மோதல் தவிர்ப்பு வலய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் பல முன்னெடுப்புகளை செய்துவரும் வைத்திய கலாநிதி. வரதராஜா அவர்களின் நினைவு மீட்டலின் மூலம் நம்மையும் தாயகத்தின் முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு செல்கிறார் இயக்குனர். மருத்துவரின் நீண்ட நெடிய வலிகள் மிகுந்த பயணத்தை கோரமான காட்சிகள் இல்லாது,குறியீடுகள் மூலமும் பார்ப்பவர்கள் மனதில் பதிய வைத்திருப்பது அற்புதம். தாயகத்தில் தமிழ் மக்கள் சாதி மத பேதமின்றி ஒற்றுமையாய் இருந்ததை மாசில் வீணையும் பாடல் மூலம் முருகப்பெருமான் , இயேசு , புத்தர் என்ற மூன்று கடவுளின் படங்களை கொண்டு குறியீட்டோடு காட்டியுள்ளார்.
அப்பாவி பொதுமக்களை , பிஞ்சுகளை ,பெண்களை பாரபட்சமின்றி ஈவு இரக்கமின்றி இனவெறி இராணுவம் காவு வாங்கியதை எளிய கட்சி படுத்துதலின் மூலம் கனமாக முன் வைக்கிறார் இயக்குனர் . அப்பாவி பெண்களை புலிகள் சீருடை அணிவித்து சீரழிப்பதையும் அமைதி போதிக்க வந்த புத்தம் இலங்கையில் மட்டும் ரத்தம் குடித்ததையும் போதிய மருத்துவ வசதிகளை அளிக்காமல் அப்பாவி மக்களை கொன்று அழி த்ததையும் மோதல் தவிர்ப்பு வலயம் என உலகத்தையும் அப்பாவி மக்களையும் நம்பவைத்து அளவுக்கதிகமான மக்களை செறிவடைய செய்து,சாட்சிகளற்று அரங்கேற்றிய இனப்படுகொலையையும் காட்சி படுத்துதலில் ஒவ்வொரு மனிதரும் பொருளும் மனிதரும் கனமாக முன் வைத்து சொல்லவொணா சோகத்தில் நெஞ்சை நிறைக்கிறார்கள்.
போதிய மருந்துகள் ,மருத்துவ வசதிகள் உணவுகள் ஏதுமின்றி அடிபட்டவர்களுக்கும் காயம் பட்டவர்களுக்கும் உயிர் வலியுடனும் ரத்த கரையுடனும் மருத்துவம் அளிக்கப்பட்ட வேதனையையும், வாகன எண்கள், மருத்துவ ஆம்புலன்ஸ் எண்கள், திகதி , நோயாளிகள் விவரம் குறிக்கப்பட்ட கரும்பலகை அனைத்திலுமே வரலாற்று முக்கிய நாட்களை குறியீடாக சொல்லி அசர வைத்துள்ளார் இயக்குனர். மிதிவெடி அபாய பகுதியிலும் குண்டு சத்திற்குள்ளும் ரத்த வெள்ளத்திற்குள்ளும் தன்னுயிரை துச்சமாக எண்ணி, தன் நினைவு உள்ளவரை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய டாக்டர் வரதன் மகத்தான மாமனிதராகவே மனதில் உயர்ந்து நிற்கிறார். மருத்துவத்தில் தமிழ் குலத்துக்கு இன்னுமொரு அடையாளம் என்றே சொல்லலாம்.
கண்முன்னே கண்ட கோரக்காட்சிகளால் மனப்பிறழ்வுடன் வாழும் மனிதன் , இன்று மது போதை, வாள்வீச்சு என மனப்பிறழ்வுடன் வாழும் தமிழ் சமூகத்தின் இன்றைய இளைஞர்களின் நிலையை சுட்டி காட்டி செல்கிறார்.அப்பாவி மக்களுக்காக அர்ப்பணிப்பை தந்த மருத்துவருக்கு தண்ணீர் தர மறுக்கும் மக்களையும் காட்சி படுத்தி கசப்பான உண்மையை உரைக்க செய்துவிட்டார்.
ஒட்டுமொத்தமாக மனிதராய் பிறந்த அதிலும் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய நமது இளைய தலைமுறையினருக்கும் காட்டப்பட வேண்டிய முக்கியமான ஆவண படம் என்பதில் ஒரு துளியும் சந்தேகம் இல்லை.
மிகை படுத்தப்படாத, கோரமாய் அல்லாத ஆனால் கனம் மிகுந்த, பொருள் பொதிந்த உண்மையை உலகுக்கு உரைக்க வந்த "பொய்யா விளக்கு" நிச்சயம் சர்வதேச நீதி கேட்கும் போராட்டத்திற்கு வலுசேர்த்து, இழந்த அப்பாவி உயிர்களுக்கும், வாழும் மீதி உயிர்களுக்கும் நீதி கிடைக்க வழிகோலும் என்பது திண்ணம். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாய் ஓரினமாய் இணைந்து மருத்துவரின் முன்னெடுப்புகளை உணர்ந்துகொண்டு ஆதரவு தந்து இத்திரைப்படத்தினை வெற்றியடைய செய்வதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஓற்றுமையை ஒருமித்த குரலில் உலகுக்கு உரைப்போம்.
உலகின் பல பகுதிகளில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சையை தருகிறது.
தமிழனென்று சொல்லடா!!!!
தலை நிமிர்ந்து நேர்வழியில் ஒற்றுமையாய் நில்லடா!!!!!
நன்றி
இளவரசி இளங்கோவன்
தமிழ் நாடு
எம் தேசத்தில் நடந்தேறிய துயரத்தை திரையில் கொண்டு வந்தமைக்கு திரைக்குழுவினருக்கு ரொம்ப நன்றி. படம் பார்ப்பதற்கு முன் நான் நினைத்தேன் அவ்வாறன ஒரு அவலத்தை எவ்வாறு திரையில் கொண்டு வருவது சாத்தியம் என்று. ஆனால் படம் மிகவும் தத்துருவமாக, யதார்த்தமாக, எதுவும் மிகைப்படுத்த படாமல் உருவாக்க பட்டுள்ளது. நடிப்பு,பாடல்கள்,இயக்கம், ஒலிப்பதிவு அனைத்தும் அருமை. இயக்குநருக்கு இது முதல் படம் போன்று தெரியவில்லை.பல படங்கள் இயக்கிய அனுபவம்போல் இருக்கிறது. Dr வரதன் அண்ணா நடிப்பு என்று சொல்வதை விட அந்த பாத்திரமாகவே வாழ்ந்துஉள்ளார். பொய்யா விளக்கு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற படங்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்.
எம் தேசத்தில் நடந்தேறிய உண்மைச் சம்பவம்.
எவ்வளவுதான் ஆழமான குழியில் புதைத்திட்டாலும் உண்மை என்றோ ஒருநாள்
வெளிச்சத்திற்கு வரும் , என்பதற்கு ஏற்ப உருவானதே Dr. வரதராஜாவின் "பொய்யா விளக்கு".
இறுதிப்போரின் கொடூரங்களை மக்களோடு மக்களாக இருந்து அனுபவித்து அம்மக்களுக்காக அவர் செய்த மருத்துவப்பணியும் , எதிர் கொண்ட இன்னல்களும் உடனிருந்து பார்ப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்ணாற் பார்க்க முடியாத, காதாற் கேட்கமுடியாத பல கொடூரமான சம்பவங்களைக் குறியீடாகக் காட்டிய விதம் சிறப்பாக இருந்தது. வன்முறைக்காட்சிகள் பல தவிர்க்கப்பட்டாலும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. வைத்தியரின் இயல்பான நடிப்பு உருக்கமாக இருந்தது. வேறுபட்ட களம் ஒன்றை உண்மைக்காட்சிக்குரிய களமாக மாற்றிய விதமும் , ஒளிப்பதிவு செய்த விதமும் சிறப்பானதே.
2009 இறுதிப் போரின் கொடூரங்களை தொலைக்காட்சிகளிலோ , பத்திரிகைகளிலோ பார்க்க முடியாமல் மூடிவைத்தவர்கள் நாங்கள். ஆனால் அக்களத்துக்குள் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்து பல கொடூரங்களைக் கண்டு மனம் உடைந்த வைத்தியரின் உள்ளக்குமுறலின் பாதியை ஏனும் இப் படத்தினூடே வெளிக்கொணர்ந்தது வெற்றிக்குரியது.
ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது என்பதை மனதிற் கொண்டு தவறவிட்டவர்கள் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
இது இப்படி நடந்தது என்று கூறுவது இதிகாசம். கடவுள் எங்கே இருக்கின்றார்? என்று பிள்ளைகள் கேட்கும்போது, தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வோம். எங்கே காட்டு என்று கேட்கும்போது புராணக் கதைகளையும் , இதிகாசக்கதைகளையும் கூறி கடவுள் இருப்பதனை மெய்ப்பிக்க முயல்கின்றோம்.
கடவுள் என்பவர் யார் ? கடவுள் தேவைப்படும் போதுதான் காட்சி கொடுப்பார். எம்மைப் பொறுத்தவரை இறுதிப்போரில் உடனிருந்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காத்த Dr. வரதராஜா போன்றோரே கடவுள்கள். எனவே இதை உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுவதுடன் அவர்களுடன் கூட இருந்து இப் படத்தைக் குடும்பத்துடன் பார்த்து நாம் கடந்து வந்த பாதையை அவர்களும் பார்க்க வழி செய்யுங்கள்.
இணையத்தில் வீட்டிலிருந்தே பார்க்க வழி செய்தமைக்கு நன்றி.. PayPal மூலம் கட்டணம் செலுத்தி அரைமணி நேரத்திலேயே படத்தை பார்க்கும் இணைப்பு கிடைத்தது. படத்தை பார்த்தபின் பிள்ளைகள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதுவே படத்தின் வெற்றி.. நன்றி.. நந்தா
This movie does very well articulate the situation of a doctor who was serving the public during a war crime. The doctor’s emotional pain part of handling the surrounding and the pleasure part of standing up to serve the public has been brought out well balanced through out the movie.
The movie starts very slow for the first 10 minutes, and it picks up the momentum of bringing raw and core materials of the true happenings until the end. The ending of the movie details how the medias are set to lay out and broadcast scripted messages by forcing the victims.
Specifically, the boy who played the depressed character acted very well to bring out the message of - how a war situation treats a child minded innocent - and how ignorant a military can become as the violence amplifies. The director of this movie created a scene of placing a wheel right after the death of that innocent boy – which tally with the same feel of Karna dying at the wheel in Mahabharata.
This movie has given absolute justice to a niche aspect out of the many inhumane happenings in Sri Lanka. I encourage the producers and the team to work on further more future project together. And wish all the very great success with this one!
It's a great historical movie for Eelam Tamil adults and children home and abroad. My teenage children who were born in Canada, were able to watch the movie to understand what really happened against Tamil people in Sri Lanka in 2009. Instead of just telling them the story verbally, when they see it on screen, they understand what exactly happened to our people back home. They understand how the Sri Lankan forces tricked and cowardly killed the innocent people. They asked me if those serious violations against innocent Tamils are real, and why can the Sri Lankan government treat the fellow Tamil citizens like here in Canada?
Hats off to the director and producers of this great movie. Please continue to do produce more real Eelam stories not only to reveal the truth to the world but to record our Eelam Tamil history and educate our kids around the world. Please send me a link where I can donate and support you for this and future events.
We didn't know that we could rent online. Maiyuran's cousin from Ohio sent us the link. He may know Dr. Varatharaja. It was very good for our family to watch. Especially for the kids to understand the struggle our people (and kids their age) had to face. The subtitle really helped and we were able to explain the issues tamils have been facing. It was great of you to create this movie for our history to not be forgotten. The movie was very clear. We were casting from laptop to TV and experience glitches at times. But other than that, no issues at all.
பொய்யா விளக்கு *
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் ..
அதன் முக்கிய சாட்சி வைத்தியர் வரதராஜா
அவரை மையப்படுத்திய கதைக்களம் ..இதில் அவரே நடித்துள்ளதால்
அவரின் நினைவு மீட்டல்களே கதை முழுமையாக வருகிறது ..
அதை எந்தவித அலட்டல்களுமின்றி மிக இயல்பாக அவர் நடித்துள்ளார் அந்த வகையில் வைத்தியர் பாராட்டுக்குரியவர் ..
இயக்கம் பாராட்டுக்குரியது ..கடைசிவரை தொய்வு இன்றி செல்கிறது ..
இசை படத்தோடு ஒட்டி செல்கிறது ..
சித்திரவதைகளை சப்தங்கள் மூலமாகவும் ..டாக்டர் அவரது சக கைதியின் முகபாவனை மூலமாகவும் காட்டும் அபாரம் ..
ஒளிப்பதிவு அபாரம் ..கமெரா ஒரு கலைவண்ணத்துடன் செல்கிறது ...
கடைசியில் கைதியாக அழைத்து செல்லப்படும் டாக்டர் ..தான் உயிரை பணயம் வைத்து சேவை செய்த
சகமக்களிடம் தண்ணீர் கேட்பதும் ..அது மறுக்கப்படுவதும் ...
அடுத்த காட்சியாக ..கேணலிடம் தண்ணீர் கேட்பதும் ..தண்ணீர் தரப்படுவதும் ..இயக்குனர் எதையோ கோடு காட்ட நினைக்கிறார் ..புரிகிறது ..
டாக்டர் மனைவியாக வருபவர் ..இயல்பான மனித நிலையை வெளிப்படுத்துகிறார் ...
படம் சாதாரண இந்திய தமிழ் சினிமா ரகம் இல்லை ...
வித்தியாசமான தளம் ..மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் ...உண்மையில் அத்தனை நடிகர்களும் புதுமுகங்கள்...புதிய இயக்குனர்...மிக குறைவான நிதிநிலை ...இதில் இவ்வளவு சிறப்பாக படத்தை கொடுத்ததே ஆச்சரியம்...மனநிலை சரியில்லாத இளைஞனுக்கு மருத்துவர் ஆதரவளிப்பதும் ...அவர் குண்டடி பட்டபோது அவன் காப்பாற்ற வருவது...அவன் கொலை செய்யப்படுவது..இயக்குனரின் திறமை புலப்படுகிறது...அவனது நெற்றியில் சன்னம் துளைப்பது அவன் விழும் இடங்கள் யதார்த்தமாக இருந்தது ..விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்க சென்றவனை...ரசிகனாகவே மாற்றம் கொள்ள வைத்தது படம் ..