We are excited to announce that our film ‘The Lamp of Truth’ has been selected to be screened at the 51st International Film Festival of India(Goa) and has been nominated for the prestigious ICFT-UNESCO GANDHI Medal. It will compete for this award along with selected Indian and International Films. ICFT-UNESCO Gandhi Medal is instituted by the International Council for Film, Television and Audiovisual Communication, Paris, and UNESCO. This award is being given to a film that best reflects Mahatma Gandhi’s ideals of peace, tolerance, and non-violence.
யுனெஸ்கோ-காந்தி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொய்யா விளக்கு.ஒரு திரைப்படத்தினை உருவாக்குவதில் உள்ள இடர்களையெல்லாம் தாண்டி பொய்யா விளக்கு வெளிவந்தது. எமது மக்களின் அவலங்களை வெளியே கொண்டு வருகின்ற ஒரு பெரு முயற்சியின் சிறு படிக்கல்லாகவே இதனை எதிர்கொண்டோம். இன்று எமது முயற்சி புகழ் பெற்ற திரைப்படவிழாவினால் வரவேற்கப்பட்டு, ஒரு முக்கியமான விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவதை அறிவிப்பதில் மகழ்வடைகிறோம். இந்திய சர்வதேச திரைப்பட விழாவினால் பரிந்துரைக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பிப்பின்(யுனெஸ்கோ) சர்வதேச திரைப்படம்-தொலைக்காட்சி மற்றும் ஒலி-ஒளி தொடர்பாடல் மையத்தினரின் அனுசரணையுடன் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் சமாதானம், சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சைக் கொள்கைகளைப் பறைசாற்றுகின்ற திரைப்படத்திற்கு வழங்கப்படுகின்ற இந்த விருதுக்காகப் பொய்யா விளக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரியதாகும்.