பொய்யா விளக்கு முழு நீள திரைப்படம் இந்த வருடம் UNESCO விருதிற்கு பரிந்துரைக்க பட்டதை அறிந்திருப்பீர்கள். https://filmguide.iffigoa.org/detail/?id=4924 

COVID-19 காரணமாக திரையில் வெளியிடுவது மேலும் தள்ளி செல்வதால், அநேக சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள்  மற்றும் மனிதஉரிமை செயல்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொய்யாவிளக்கு திரைப்படத்தை வெண்சங்கு கலை கூடம் Amazon Prime Video இல் தமிழரல்லாதோரும்  பார்க்கும் வகையில் அனுமதியை பெற்றிருக்கிறது. 

பின்வரும் இணைப்பில் திரைப்படத்தை பார்வையிடலாம் 

இந்த இணைப்பில் உள்ள  பாடல் பொய்யாவிளக்கு திரைப்படத்தில் இடம்பெற்றது.

Amazon நிறுவனம் தற்போது அமெரிக்க (USA) இங்கிலாந்து (UK) ஆகிய நாடுகளில் மட்டும் தான் மக்கள் $2.99 செலுத்து SD யிலும் $3.99 செலுத்தி HD யிலும் பார்வையிடும் அனுமதியை அளித்துள்ளனர். போதிய மக்கள் இதில் பார்வையிட்டால் அவர்கள் ஏனைய நாடுகளுக்கும் அனுமதிப்பார்கள். Amazon மூலம் திரையிடும் போது அவர்கள் ஐம்பது வீதமளவில் நிதியை எடுத்து கொண்டாலும், இந்த வழியாக தான் உலக மக்களிடம் தற்போது இந்த தமிழின அழிப்பை கூறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை கொண்டு செல்ல முடியும். வெண்சங்கு கலைக்கூட நிதியறிக்கையை சமூக நலன் கருதி கடந்தவருடம் வெளியிட்டிருந்தோம் (https://whiteconchstudios.com/statementjuly6/).

இந்த திரைப்படத்தை ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள உங்கள் நண்பர்களை பார்க்க வேண்டியும் அவர்களின் விமர்சனங்களை தமிழரல்லாதோரிடம் பகிர்வதன் மூலம் உலக மக்களிடம் கொண்டு செய்யலாம். ஏனைய நாடுகளில் உள்ளோர் இந்த பட தலைப்பை (The Lamp of Truth)  Amazon தளத்தில் தேடுவதன் மூலம் அந்தந்த நாடுகளில் கொண்டுவரும் வாய்ப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

We also invite you to visit the movie database site IMDB and put your review / star rating for this feature film.

https://www.imdb.com/title/tt10482802/

Please also introduce the movie website www.thelampoftruth.com to your non-Tamil friends. Since White Conch Studios raised the fund to produce the movie and most of it cost for the production, it’s difficult for us to spend for major marketing to get a worldwide audience. However, with your help, we are confident that we can get this movie to a worldwide audience at the end of this year. 

பதினைந்துக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை திரைப்பட விழாக்களில் வென்று, ஈழத்திரைப்படங்களின் தரத்தினை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற இந்தத் திரைப்படம் எங்கள் மக்களின் கதைகளை சர்வதேச பரப்பில் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற வெண்சங்கு கலைக்கூடத்தின் ஆர்வத்தினைத் திருப்தி செய்வதாக இருக்கிறது.இந்த முயற்சியினை வெற்றிகரமாக ஆக்குதல் எம் மக்களின் பொறுப்பாகும். 

ஒரு கொடூரப் போர் வீழ்த்திச் சென்ற எங்கள் மக்களின் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் தியாகங்களும், அவலங்களும் இன்னமும் இரத்தம் காயாத நினைவுகளோடு இருக்கின்றன.  இவை சொல்லப்படல் வேண்டும்.  இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தலைமுறை இருக்கும் போதே, அந்தக் கதைகள் திரிபு படுத்தப்படாமல் உலகமெங்கும் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். பொய்யா விளக்கு என்ற இந்தத் திரைப்படம் இந்த நோக்கத்திற்கான ஒரு காத்திரமான முதற்படி. எமது வருங்கால சந்ததிக்கும், தமிழரல்லாதோருக்கும் கற்பிதலுக்கான ஒரு மூலமாக இது இருக்கிறது.  

 தொடர்ந்தும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

பொய்யா விளக்கு மேலதிக விமர்சனங்கள் மற்றும் பார்த்தவர்களின் கருத்துக்களை https://whiteconchstudios.com/viewer-comments/ இல் காணலாம்.

This film has proved to be a very good instructional tool for passing the knowledge of the Tamil genocide to our next generations and to the non-Tamil communities around the world.  Support for this film is vital in many ways for the success of Eelam cinema.  The thousands of stories buried in our homeland are still to be told to the world and “The Lamp of Truth” is a great stepping stone in this direction.  

White Conch Studios

Email: contact@whiteconchstudios.com 

Social Media: https://www.facebook.com/whiteconchstudiosYouTube Channel: https://www.youtube.com/whiteconchstudioshttps://www.amazon.com/gp/product/B0948S18DH