Write a new entry for the Guestbook

 
 
 
 
 
 
 
Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
Kathir Kathir from Paris wrote on May 21, 2020 at 10:46 pm
பொய்யா விளக்கு * முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் .. அதன் முக்கிய சாட்சி வைத்தியர் வரதராஜா அவரை மையப்படுத்திய கதைக்களம் ..இதில் அவரே நடித்துள்ளதால் அவரின் நினைவு மீட்டல்களே கதை முழுமையாக வருகிறது .. அதை எந்தவித அலட்டல்களுமின்றி மிக இயல்பாக அவர் நடித்துள்ளார் அந்த வகையில் வைத்தியர் பாராட்டுக்குரியவர் .. இயக்கம் பாராட்டுக்குரியது ..கடைசிவரை தொய்வு இன்றி செல்கிறது .. இசை படத்தோடு ஒட்டி செல்கிறது .. சித்திரவதைகளை சப்தங்கள் மூலமாகவும் ..டாக்டர் அவரது சக கைதியின் முகபாவனை மூலமாகவும் காட்டும் அபாரம் .. ஒளிப்பதிவு அபாரம் ..கமெரா ஒரு கலைவண்ணத்துடன் செல்கிறது ... கடைசியில் கைதியாக அழைத்து செல்லப்படும் டாக்டர் ..தான் உயிரை பணயம் வைத்து சேவை செய்த சகமக்களிடம் தண்ணீர் கேட்பதும் ..அது மறுக்கப்படுவதும் ... அடுத்த காட்சியாக ..கேணலிடம் தண்ணீர் கேட்பதும் ..தண்ணீர் தரப்படுவதும் ..இயக்குனர் எதையோ கோடு காட்ட நினைக்கிறார் ..புரிகிறது .. டாக்டர் மனைவியாக வருபவர் ..இயல்பான மனித நிலையை வெளிப்படுத்துகிறார் ... படம் சாதாரண இந்திய தமிழ் சினிமா ரகம் இல்லை ... வித்தியாசமான தளம் ..மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் ...உண்மையில் அத்தனை நடிகர்களும் புதுமுகங்கள்...புதிய இயக்குனர்...மிக குறைவான நிதிநிலை ...இதில் இவ்வளவு சிறப்பாக படத்தை கொடுத்ததே ஆச்சரியம்...மனநிலை சரியில்லாத இளைஞனுக்கு மருத்துவர் ஆதரவளிப்பதும் ...அவர் குண்டடி பட்டபோது அவன் காப்பாற்ற வருவது...அவன் கொலை செய்யப்படுவது..இயக்குனரின் திறமை புலப்படுகிறது...அவனது நெற்றியில் சன்னம் துளைப்பது அவன் விழும் இடங்கள் யதார்த்தமாக இருந்தது ..விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்க சென்றவனை...ரசிகனாகவே மாற்றம் கொள்ள வைத்தது படம் ..
Please wait...