அனைவருக்கும் வணக்கம்.
இரண்டு வருடத்திற்கு முன்னர் எமது அறிக்கையில் குறிப்பட்டவாறு பொய்யாவிளக்கு திரைப்படம் சார்பாக கடந்த இரு வருட செயல்பாடுகளை உங்களிடம் பகிர்கின்றோம். கீழுள்ள இணைப்பில் இரு வருடத்திற்கு முன்னர் தயாரிப்பு மற்றும் நிதிநிலை குறித்த அறிக்கையை கீழுள்ள இணைப்பில் காணலாம்.
பெரும் தோற்று காரணமாக திரையிடல்களில் பல இடர்களை எதிர்கொண்டாலும் உலக மக்களிடம் தமிழின அழிப்பு பற்றி பேசும் இந்த திரைப்படத்தை முறையாக கொண்டு செல்வதில் திருப்தி அடைகிறோம். அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் Amazon Prime https://www.amazon.co.uk/dp/B0948T8LQW மூலமாகவும் உலகளாவிய அளவில் https://efilmprime.com/ ஊடாகவும் குறைந்த $3.99 கட்டணத்தில் பார்க்க கூடிய வழிவகைகளை செய்துள்ளோம்.
பல சர்வதேச விருதுகளையம் கோவாவில் இடம்பெற்ற 51வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் ICFT-UNESCO இறுதிப்போட்டிக்கு பரிந்துரைக்கபட்டு திரையிடப்பட்டதை திரைப்படத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கலைஞர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த மதிப்பாக பார்க்கின்றோம். முன்னைய அறிக்கையில் குறிப்பிட்டது போல திரைப்பட உருவாக்கத்தில் குறைந்த நிதியில் அநேக கலைஞர்கள் தமது கடின உழைப்பை கொடுத்து திறம்பட கொண்டு வந்தனர். இதன் இயக்குனர் உட்பட பலர் ஊதியம் இன்றி உழைத்திருந்தனர். இந்த திரைக்குழு நேர நெருக்கடிகளுக்குள்ளும் பயணிக்கவேண்டி இருந்தது. தமது கணிப்பொறியிலியல் வேலையில் இருந்து இயக்குனர் இரு மாதங்கள் ஓய்வில் இருக்கும் அதேநேரம் மருத்துவர் வரதராஜா தமது புதிய வேலையில் இணைய முதல் 40 நாட்கள் படப்பிடிப்புகளை முடிக்க வேண்டிய ஒரு அதீத நேரநெருக்கடிக்குள்ளும் இத்திரைப்பட வேலைகள் நடைபெற்றன.
பொய்யா விளக்கு திரைப்படத்துக்கு இதுவரை நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. இந்த அறிக்கையின் நோக்கம், இந்தத் திரைப்படத்தின் விநியோகம் சம்பந்தமான நிதி நிலை மற்றும் வெண்சங்கு கலைக்கூடத்தின் எதிர்கால முயற்சிகள் குறித்த தகவல்களைச் சரியான முறையில் தெரியப்படுத்துதலாகும். 2020 ஜூலை அறிக்கையில் $32,272 அல்லது மொத்த செலவில் அண்ணளவாக 15% ஐ மீளப்பெறக்கூடியதாக இருந்தது என குறிப்பிட்டிருந்தோம். கடந்த இரு வருடங்களில் இதுவரை, திரையிடல் மூலம் $1510, அனுசரணை மற்றும் ஆதரவாளர்களின் அன்பளிப்புகள் மூலம் $3430, Online (Amazon Prime, eFilmPrime) திரையிடல் ஊடக $1410 என மொத்தமாக $6450 பெறப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் இனஅழிப்பு கதைகளை வெளியுலகுக்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் கிடைக்கும் வகை செய்தல் வேண்டும் என்ற எண்ணத்திலே தான் பொய்யா விளக்கு என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இது வரை Amazon Prime மற்றும் eFilmPrime.com என இரண்டு தளங்களில் அனைவரும் பார்க்கும் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெண்சங்கு கலைக்கூடம் இன்னும் பல தரமான திரைப்படங்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது. இது பற்றிய மேலதிக விபரங்களை விரைவில் அறியத்தருகின்றோம்.
எங்களுடன் தொடர்புகொள்வதற்கு: contact@whiteconchstudios.com அல்லது www.whiteconchstudios.com என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். நன்றி.
இப்படிக்கு,
வெண்சங்கு கலைக்கூடம்